பிரபல ரவுடி மீது துப்பாக்கிக்சூடு : கதிகலங்க வைக்கும் காவல்துறை… திருச்சியில் பயங்கரம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 6:56 pm

ரவுடி ஜம்பு என்கின்ற ஜம்புகேஸ்வரனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது காவலர்களை தாக்கி விட்டு தப்பும் முயன்ற போது ஆய்வாளர் வெற்றிவேல், உதவி ஆய்வாளர் ராஜகோபால், சிறப்பு ஆய்வாளர் செந்தில் காவலர் சதீஷ், உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: லட்டு பிரசாதத்தில் கலப்படம் இருந்தால் நானும் என் குடும்பமும் நாசமாக போயிடணும்.. திருப்பதி கோவிலில் முன்னாள் அறங்காவலர் சத்தியம்!

காயம் அடைந்த நான்கு காவலர்களும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி:

விசாரணைக்காக ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை அழைத்து செல்லும் போது காவல்துறையிரை தாக்கி விட்டு அவர் தப்ப முயன்றார்.

பிரபல ரவுடி மீது துப்பாக்கிக்சூடு

அதனால் தற்காப்பிற்காக காவல்துறையினர் அவரை இடது காலில் சுட்டு பிடித்தனர். தற்போது கைது செய்யப்பட்ட ஜம்பு மீது 15 வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஒ விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!