கல்லூரி மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி உயிரிழப்பு : திண்டுக்கல்லில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 5:24 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு பழைய பட்டியை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கன்னியப்பன். இவரது மகள் கார்த்திகாஜோதி.

இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியாருக்கு சொந்தமான சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் கார்த்திகா தேவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று கார்த்திகாதேவி உயிரிழந்தார். இதை எடுத்து கார்த்திகா தேவியின் உடலை திண்டுக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 508

    0

    0