நவீன மீன் சந்தை கட்டுமானத்தில் ஊழல் …? திமுக அமைச்சர் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினரிடையே கைகலப்பு..!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 4:33 pm

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்-ஐ இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நவீன மீன் சந்தையை இன்று அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் மற்றும் இளைஞர் காங்கிரசார் சிலர் வந்திருந்தனர்.

அப்போது அவர் பேசி கொண்டிருக்கும் போதே, நவீன மீன் சந்தை கட்டுமானத்தில் திங்கள் நகர் பேரூராட்சி தலைவரும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான சுமன் ஊழல் செய்திருப்பதாக எம்எல்ஏ பிரின்ஸ் உடன் வந்த சிலர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், இரு பிரிவினர் இடையே கோஷ்டி பூசல் உருவாகி வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமனுக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் எம்.எல்.ஏ பிரின்ஸை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு சந்தையை திறந்து வைத்தார். அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே