குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரையிலான மீனவ கிராமங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 3000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பைபர் படகுகள் என சுமார் 5000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லமால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
This website uses cookies.