15ம் தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்: விசைப்படகுகள் கரை திரும்ப அறிவுறுத்தல்..!!

Author: Rajesh
12 April 2022, 10:24 am

சென்னை: ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.

இதனையொட்டி, அனைத்து விசைப்படகுகளும் வரும் 14ம் தேதி இரவுக்குள் கரை திரும்பிட வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி அமலுக்கு வரும் நிலையில், விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!