5 வருடங்களாக 64 பேரால் பாலியல் வன்கொடுமை.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!

Author: Hariharasudhan
11 January 2025, 12:44 pm

கேரளாவில் 13 வயதில் இருந்து சுமார் 5 வருடங்களாக 64 பேரால் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்தனம்திட்டா: சமீபத்தில், மஹிளா சமக்யா எனப்படும் என்ஜிஓ அமைப்பினர், தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் இளம்பெண் ஒருவரைச் சந்தித்து உள்ளனர். அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து 8 மாதங்களே ஆகிறது.

இந்த நிலையில், கடந்த 5 வருடங்களாக சுமார் 64 பேர் இப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, குழந்தைகள் நல அமைப்பினர் பள்ளி மூலம் வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், தான் ஒரு தடகள வீராங்கனை என அவர் தெரிவித்து உள்ளார்.

என்னுடைய 13 வயதில் இருந்து எனது அண்டை வீட்டார் முதல் சுமார் 64 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளதாகக் கூறிய அப்பெண், தன்னிடம் மொபைல் போன் இல்லை என்றும், தன்னுடைய தந்தையின் போனில் சுமார் 50 நபர்களின் மொபைல் எண்கள் உள்ளதாகவும் கூறி உள்ளார்.

Kerala Sexual assault

தடகள வீராங்கனையாக இருக்கும் நிலையில், பயிற்சி நேரங்கள், விளையாட்டு முகாம்கள், போட்டி நடக்கும் இடங்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலரும் என்னுடைய அந்தரங்க வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வதாக அதிர்ச்சிகரமான செயலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘இதனால்’ தான் நான் காமெடியன் ஆனேன்.. திடீரென மாறிய வடிவேலு முகம்!

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் கவுன்சிலிங் வழங்க பரிந்துரைத்த குழந்தைகள் நல அமைப்பு, இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதன்படி, போக்சோ உள்பட வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்த போலீசார், இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், இதில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபர் ஏற்கனவே சிறையில் உள்ளதாகவும், அது மட்டுமல்லாமல் 10 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் பத்தனம்திட்டா போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • I loved My fans Uncondtionally Says Ajith kumar UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
  • Views: - 48

    0

    0

    Leave a Reply