அதிகாலையிலேயே ‘மனிதன்’ பட பாணியில் சம்பவம்.. சாலையோரத்தில் இருந்த 5 தமிழர்கள் உயிரிழப்பு!

Author: Hariharasudhan
26 November 2024, 10:43 am

கேரளா, திருச்சூரில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகா பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.25) லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, அதிகாலை 4 மணியளவில் அங்கு உள்ள ஜேகே சினிமாஸ் தியேட்டர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியுள்ளது.

இந்தக் கோர விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்த நபர்களை சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.

Kerala Thrissur Car accident

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் காளியப்பன் (50), ஜீவன் (4), நாகம்மா (39) மற்றும் பெங்காலி (20) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும், ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும், அவருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதையும் படிங்க: அரசு பெண்கள் பள்ளி அருகில் பாலியல் தொழில்.. கரூரில் வழக்கறிஞர் வீடியோ உடன் புகார்!

இதனையடுத்து, கண்ணூர் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஜோஸ் (54) மற்றும் கிளீனர் அலெக்ஸ் (33) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ’மனிதன்’ பட பாணியில் நடந்த இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ