தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தல்… பயணிகள் இடையே பதற்றம் ; இறுதியில் காத்திருந்த Twist!!

Author: Babu Lakshmanan
25 April 2024, 9:19 am

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தால் விமானப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த ஒத்திகை இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க: சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பிரபல பிரியாணி கடை… நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி?

இதில் பயணிகள் விமானக் கடத்தலை தடுக்கவும், அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை எதிா்கொள்ளவும் ஒத்திகை நடைபெற்றது. திடீரென நடைபெற்ற இந்த ஒத்திகையால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் சிறிது நேரம் பரபரப்பாகினர். பின்னர், விபரம் தெரிய வரவே சகஜக நிலைக்கு திரும்பினர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமையில் விமான நிலைய குழுக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் தயாா் நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் விமான நிலைய இயக்குநா் ஆா்.ராஜேஷ், மற்றும் மத்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 477

    0

    0