கல்லூரி மாணவனுக்கு பிதாமகன் பாணியில் FLIPKART கொடுத்த உருட்டு… ஆன்லைனில் ஆர்டர்.. பார்சலில் வந்த பழைய ஷு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 2:52 pm

கல்லூரி மாணவனுக்கு பிதாமகன் பாணியில் FLIPKART கொடுத்த உருட்டு… ஆன்லைனில் ஆர்டர்.. பார்சலில் வந்த பழைய ஷு!!

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கல்லூரி மாணவனுக்கு பிதாமகன் பாணியில் உருட்டு ஆன்லைனில் வந்த பழைய ஷீ பழைய செருப்பை அனுப்பிய flipkart நிறுவனம் சமூக வலைதளங்களில் வைரல்.

பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா,வாடிக்கையாளர் கேட்ட பொருளுக்கு பதிலாக சரோஜாதேவி பயன்படுத்திய அற்புதப் பொருள் என சோப்பு டப்பாவை ஏமாற்றி விற்பனை செய்வார்.

அதேபோல ஆனைமலையை பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு flipkart நிறுவனம் ஆர்டர் பொருளுக்கு பதிலாக மாற்றி வேறு ஒரு பொருளை அனுப்பி உள்ளது.

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் மரம் மாசிலாமணி, இவரது மகன் கல்லூரி மாணவன் ஹரிஹர பிரியன் ஆன்லைனில் புதிய ரக ஷூ ஒன்றை ஆர்டர் செய்தார்.

ஆனால் அவருக்கு பிலிப்கார்ட் நிறுவனம் அவர் ஆர்டர் செய்த புதிய ஷுவிற்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட பழைய ஆண் ஷீ ஒன்றும்,பெண் செருப்பு ஒன்றையும் அனுப்பி உள்ளது.

இதனால் ஆர்வத்துடன் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை பிரித்துப் பார்த்த சமூக ஆர்வலரின் மகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பிலிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகிய போது, உரிய பதில் கிடைக்காததால் ஆன்லைனில் ஆர்டர் செய்த நபர் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu