திருமணமான பெண்ணிடம் உல்லாசம்.. ரியல் எஸ்டேட் அதிபர் அரங்கேற்றிய காம நாடகம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 8:00 pm

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சித்ரா (32). சித்ராவிற்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இதையும் படியுங்க: விடாமல் துரத்திய மர்ம ஆசாமி.. அலறிய பெண்கள் : கோவையில் நடந்த பகீர் சம்பவம்..(வீடியோ)!

அதே அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மனோஜ் என்பவரும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

திருமணமான மனோஜ் சித்ராவிடம் தனக்கு திருமணமாகவில்லை எனக் கூறிய நட்பாக பழகி வந்துள்ளார். நாளைடைவில் அது காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.

Real Estate Owner Arrest

இந்நிலையில் இருவரும் வேலை பார்த்து வந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனோஜ் தனியாக அலுவலகம் ஆரம்பித்து தொழில் செய்ய வேண்டும் அதற்கு பணம் இல்லை என சித்ராவிடம் கூறியுள்ளார்.

என்னால் முடிந்ததை தருகிறேன் நீங்கள் தொழில் ஆரம்பியுங்கள் எனக்கூறி இருவரும் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே மாருதி நகரில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் அலுவலகம் ஆரம்பித்தனர்.

Sexual Assault

இந்நிலையில் சித்ராவிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என மனோஜ் ஆசை வார்த்தை கூறியதால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். மேலும் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.

அப்போது தொழில் தேவைக்காக சித்ராவிடம் இருந்து 3 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை மனோஜ் வாங்கி செலவு செய்துள்ளார்.

இதற்கிடையில் மனோஜ் – சித்ராவின் உறவு குறித்து தகவல் அறிந்த மனோஜின் மனைவி சித்ராவிடம் தகராறு செய்யவே மனோஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனது சித்ராவிற்கு தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா தான் வேலைக்கு வரவில்லை என்னிடம் வாங்கிய நகை பணத்தை திருப்பி தருமாறு மனோஜிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் எதையும் திருப்பி தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் நமக்குள் நடந்ததை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் மேலும் நாம் உல்லாசமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என கூறி மனோஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்து வரும் மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க சித்ரா புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சித்ரா கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் எனக்கும் என் கணவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தோம்.

நான் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தேன். அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மனோஜ் என்பவர் என்னுடன் நட்பாக பழகினார்.

நாங்கள் வேலை பார்த்த அலுவலகத்தில் பிரச்சனை ஏற்படவே இருவரும் தனியாக ரியல் எஸ்டேட் அலுவலகம் திறந்து தொழில் செய்யலாம் என முடிவு செய்தோம்.

அதன்படி திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றில் புதிய அலுவலகம் திறந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தோம்.

Trichy Illegal Affair With Real Estate

இரண்டு வருடம் நன்றாக ரியல் எஸ்டேட் தொழில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே திருமணமான மனோஜ் என்னிடம் எனக்கு திருமணம் ஆகவில்லை நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் உன்னுடைய இரண்டு மகன்களையும் பார்த்துக்கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனால் நான் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டேன். அப்போது எனது அம்மாவின் செல்போன் இருக்கு தொடர்பு கொண்ட மனோஜ் நான் உன்னிடம் பேசியது தவறு இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டேன் எனக் கூறி வேலைக்கு அழைத்தார்.

அவர் தெளிந்து விட்டார் என நினைத்து அதே அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றேன். 2 நாள் சென்றதும் எல்லாரும் வேலை முடிந்து அலுவலகத்தை விட்டு சென்றனர் மனோஜ் எண்ணெய் ஜெராக்ஸ் எடுப்பதாக கூறி இரு என கூறினார்.

நான் இருந்து வேலையை பார்த்தபோது வெளியே செல்வது போல திடீரென சட்டரை இழுத்து மூடிய மனோஜ் எண்ணெய் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.மேலும் என்னிடமிருந்து தொழிலுக்காக நகை மற்றும் பணங்களை வாங்கிக் கொண்டார்.

இதற்கிடையில் மனோஜ்க்கு திருமணமானது எனக்கு தெரிய வரவே நான் அவரிடம் கேட்டேன் உன்னால் என்ன செய்ய முடியும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என கூறினார்.

மேலும் என்னுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வளையங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து நான் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!