ஒரே நேரத்தில் மூன்று பெண்களுடன் தனித்தனியே உல்லாசம்… 17 வயது சிறுமியை மிரட்டி கொடூரம் : 52 வயது காமுகன் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 9:19 am

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 52). இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி அருகில் ஜவுளிக்கடை வைத்துள்ளார்.

திருமணம் ஆகி மனைவி, 23 வயது மகள், 20 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அழகான மனைவி அருமையான பிள்ளைகள் இருந்தும் விவேகானந்தன் மனதில் காமம் தலைக்கேறி விட்டது.

அதன் விளைவாக தன்னுடைய ஜவுளிக்கடையில் வேலை செய்யும் சாரா என்ற இளம் விதவை பெண்ணுடன் விவேகானந்தனுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கணவன் மற்றும் பெற்றோர்களை இழந்த (பெயர் மாற்றம்) டெய்சி தன்னுடைய 2 குழந்தைகளுடனும், உடன் பிறந்த தங்கையுடனும் வசித்து வருகிறார். தற்போது 17 வயதாகும் தங்கை அருகே உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 11 ஆண்டுகளாக ஆதரவற்ற டெய்சியின் குடும்பத்தை, முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தெரியாமலேயே, விவேகானந்தன் பராமரித்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக டெய்சியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த விவேகானந்தன் மனதில் காமம் குடியேற, சாராவின் தங்கையான பள்ளி மாணவியிடம் சில ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் மிரட்டி அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தன் தங்கையுடன் விவேகானந்தன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு டெய்சி அதிர்ச்சி அடைந்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த விவேகானந்தனின் முதல் மனைவி, தன் கணவர் விவேகானந்தன் குற்றமற்றவர் என கூறி வாதிட்ட நிலையில் போலீசார் ஆதாரங்களை தெரிவித்ததும் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மைனர் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்க்காக விவேகானந்தனை காஞ்சிபுரம் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் விவேகானந்தன் செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சமூக அந்தத்துடன் வாழ்ந்து வந்த விவேகானந்தன், தனிநபர் ஒழுக்கத்தை கடை பிடிக்க தவறியதின் காரணத்தால் தற்போது கம்பி என்னும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மனைவிக்கு தெரியாமல், இளம் விதவை பெண், 17 வயது சிறுமி என மூன்று பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய காமுகன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஓரிக்கை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 485

    0

    0