கோவை பெரியகுளத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்க மாநகராட்சி முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan10 மார்ச் 2022, 9:40 காலை
கோவை : உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது
கோவையில் உள்ள குளங்களில் மிகவும் முக்கியமானதும், நகரின் மையத்திலும் அமைந்துள்ள குளம் மாநகராட்சிகளில் உக்கடம் பெரியகுளம். 327 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் 5.60 அடி வரை ஆழம் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் இந்த குளம் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரியகுளத்தில் குளக்கரை பகுதியில் 1.2 கி.மீ. தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கி.மீ. தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாடுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்கடம் பெரியகுளத்தில் கோவை மாநகராட்சியின் மூலம் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக ஆய்வு அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது.
முதல் கட்டமாக 50 ஏக்கர் அளவில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாவும், வல்லுநர் குழு மூலம் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0
0