வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள்.. 1000 மூட்டை கோதுமை மாவை அனுப்பிய கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம்!!
வரலாறு காணாத மழை சென்னை மாநகரத்தையும் புறநகர் பகுதிகளையும் புரட்டிப்போட்டு விட்டது. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் மொத்தமாக தடைபட்டது. உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் தவித்து போய் விட்டனர். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் உடமைகள் மொத்தமாக வெள்ளநீரில் போய் விட்டது. அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலர் அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து வருகின்றனர்.
இது தவிர, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள், அரசு அதிகாரிகள் சார்பாக பொருட்களை சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் 5000 பிரட் பாக்கெட்டுகள், ஆயிரம் அரிசி மூட்டை (5 கிலோ எடையில்),ஆயிரம் சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுகள் லுங்கி போன்றவற்றை சங்கத் தலைவர் உதயகுமார் செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ், மைக்கேல் , அம்மாசையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். இதன் மதிப்பு 3 லட்ச ரூபாய்.
இந்தநிலையில் இரண்டாம் கட்டமாக 1000 மூட்டை கோதுமை மாவு தனி லாரியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் இரண்டு லாரிகளில் நிவாரண உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்து அங்கே பொது மக்களுக்கு வீடு வீடாக வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.