குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை வெள்ளம்.. குழந்தைகளுடன் தத்தளித்த 25 பேர் : ரப்பர் படகு மூலம் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 2:38 pm

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.. குழந்தைகளுடன் தத்தளித்த 25 பேர் : ரப்பர் படகு மூலம் மீட்பு!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாலவாயல், குமரன் நகர், சன்சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்தது.

இதையடுத்து வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுமூலம் அங்கிருந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் அங்கு வசிக்கும் பொதுமக்களை மழை நீர் சூழ்ந்து வருவதால் வெளியேறுமாறு தொடர்ந்து அவர்களிடம் வருகின்றனர். பலர் வெளியேறாமல் அங்கேயே தங்கியுள்ளனர்.

மேலும் அங்கே இருந்து 6 நாய்குட்டிகளை பாம்பு ஒன்று சூழ்ந்து கொண்டதை அடுத்து பாம்பின் பிடியில் சிக்கி இருந்த நாய்களை மீட்டனர்,

மீட்கப்பட்ட அனைவரையும் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் வருவாய்த்துறையினர் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 294

    0

    0