நொய்யலில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் : கோவையில் மூழ்கிய தரைப்பாலங்கள்… பொதுமக்கள் அவதி!!
Author: Udayachandran RadhaKrishnan8 August 2022, 4:18 pm
நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் கோவை நகருக்குள் வழி பாதையாக இருந்த தரைப்பாலங்கள் தொடர்ந்து உடைந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால் நொய்யல் ஆற்று வழித்தடங்களில் மழை நீர் கரை புரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
பின்னர் உடனடியாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தரைப்பாலம் சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உடைந்தது. இதனால் வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
அதேபோல நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தரைப்பாலத்தையொட்டி வெள்ள நீர் செல்வதால் இதுவும் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.