பூக்கடை தொழிலாளி கழுத்து அறுத்து கொலை : 2 இளைஞர்கள் கைது

Author: kavin kumar
17 February 2022, 10:01 pm

புதுச்சேரி : புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளியை கழுத்து அறுத்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நகரப்பகுதியிலுள்ள குபேர் அங்காடியில் உள்ள பூக்கடை ஒன்றில் இன்று அதிகாலை அருளானந்தம்(38) என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதனையடுத்து பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையை கொலை சம்பவம் நடைபெற்ற அருகில் உள்ள பூக்கடையில் வேலை செய்யும் சிவபாலன்(19) மற்றும் பலாஜி (23) ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்களை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும் மது அருந்தும் போது ஏற்பட்ட வாய்த்தகராறில் இருவரும் சேர்ந்து அருளானந்ததை கொலை செய்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து நீதிபதி வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தி பின்னர் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யபட்டுள்ள பாலாஜி மீது ஏற்கனவே திருட்டு வழக்கு ஒன்றில் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குபேர் அங்காடியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தங்க அனுமதி இல்லை என்றும், மீறி தங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 1641

    0

    0