கருவில் இறந்த குட்டி… பிரசவத்தில் அவதியடைந்த குதிரை : தாய் குதிரையை காப்பாற்ற போராடிய ‘ஆயுதம்’ அமைப்பினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2023, 8:11 pm

கோவை சாய்பாபா காலனி பகுதியில் குதிரை ஒன்று உடல் நிலை சரி இல்லாத நிலையில் பிரசவத்திற்கு அவதி படுவதாக ஆயுதம் என்ற விலங்குகள் மீட்புப் படையின் தலைவர் விவேக்கிற்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து மீட்புப் படை நண்பர்கள் சரவணகுமார், கார்த்திக் ராஜா ஆகியோருடன் குதிரையை மீட்க சென்றனர். அப்போது சாயிபாபா காலனி, இராமலிங்கம் பள்ளி அருகில் அந்த குதிரை பொதுமக்கள் கூட்டத்தின் மத்தியில் படுத்து கிடந்தது.

HAS அமைப்பை சேர்ந்த தன்னர்வளர் பாலகிருஷ்ணன் மருத்துவர்களுக்கு தொடர்பு கொண்டார். இரவு நேரம் என்பதால் மருத்துவர் யாரும் வரவில்லை. எனவே அலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரின் ஆலோசனையின் மூலம் குட்டியை வெளியில் எடுக்க முயற்சித்து மிகவும் சிரமமாக இருந்ததாலும், குதிரை மிகவும் அவதிப்பட்டது.

காலையில் மருத்துவமனை சென்று சிகிச்சை செய்ய மருத்துவர் கூறினார். இருப்பினும் குதிரையின் நிலை கண்டு அங்கு இருந்து அதை விட்டு செல்ல மனம் இல்லாமல் அருகில் இருந்த கால்நடை பரமாப்பிளர்கள் மற்றும் குதிரை வளர்ப்பவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன் அங்கு வந்து குதிரையின் நிலை கண்டு குட்டி இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது என்றும் இப்படியே விட்டால் குதிரையின் உயிருக்கு ஆபத்து என கூறியதால் குட்டியை வெளியில் எடுக்க முயற்சித்து குட்டி கறுவில் இறந்து 2 நாட்கள் ஆனதால் தாய் குதிரை சற்று பலவீனம் ஆகி இருந்ததால் மிகவும் சிரமமாக இருந்தது.

இருப்பினும் தொடர்ந்து குட்டியை வெளியே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 பேரின் தொடர் முயற்சியால் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 2 மணியளவில் குட்டியின் இறந்த உடல் வெளியே எடுக்கப்பட்டு தாய் குதிரை காப்பாற்றப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

  • thalapathy 69 is telugu movie remake தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!
  • Views: - 434

    0

    0