தடா பெரியசாமியை தொடர்ந்து காங்., பிரமுகர் அதிமுகவில் ஐக்கியம் : சைலண்டாக தூக்கிய இபிஎஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 1:45 pm
Kai
Quick Share

தடா பெரியசாமியை தொடர்ந்து காங்., பிரமுகர் அதிமுகவில் ஐக்கியம் : சைலண்டாக தூக்கிய இபிஎஸ்!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் வேறு கட்சிக்கு தாவுவது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது.

அப்படித்தான் சமீபத்தில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் மலேசியா எஸ்.பாண்டியன். இவர் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும், கடந்த 2016-21-ல் முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக வும் இருந்தார். இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

Views: - 129

0

0