’காக்கா பிரியாணியா?’.. உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை.. திருவள்ளூர் பகுதிகளில் பரபரப்பு!

Author: Hariharasudhan
21 December 2024, 11:13 am

திருவள்ளூர் அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டு, சாலையோரக் கடைகளில் இறைச்சிக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்து உள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நயப்பாக்கம் காப்புக்காடு அருகே உள்ள திருப்பாக்கம் கிராமத்தில் காகங்கள் கொல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதன் பேரில், அங்கு சென்ற வனத்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 19 காகங்கள் கொல்லப்பட்டது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, காகங்களை விஷம் வைத்து பிடித்ததாக ரமேஷ் – பூச்சம்மாள் தம்பதியை வனத்துறையினர் பிடித்தனர். அப்போது, குடும்பத் தேவைக்காக காகங்களைப் பிடித்ததால், 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு அபராதம் விதித்து, தம்பதியை விடுவித்தனர்.

இருப்பினும், திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகள், தாபாக்களில் காகம் இறைச்சி சேர்த்து பிரியாணி உள்ளிட்ட உணவுகள் சமைக்கப்படுவதாகவும், எனவே இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Crow killed for Biryani in Tiruvallur areas social activist claims

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “நயப்பாக்கம் பகுதியில் 20 காகங்களுக்கு விஷம் வைத்து உள்ளனர். அவற்றில் 19 காகங்கள் உயிரிழந்துவிட்டன. ஒரு காகத்திற்கு சிகிச்சை அளித்து, பறக்க விடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தலைமுடிக்கு தேவையான அம்புட்டு பொருளும் வீட்ல இருக்கும்போது நம்ம ஏன் வெளியில அலையணும்!!!

இந்த காகங்களை இறைச்சியாக சாலையோரக் கடைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் ஆகியவைகளில் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, இது தொடர்பாக அளித்த புகாரில், உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபடுவர் என சுகாதாரத்துறை செயலாளர் உறுதி அளித்து உள்ளார்” எனக் கூறி உள்ளார்.

  • Nayanthara controversy 2024 விக்னேஷ் சிவன் ஒரு தலையாட்டி பொம்மை..நயன்தாரா சினிமாவிற்கு சாபக்கேடு…விலாசும் பிரபலம்..!
  • Views: - 52

    0

    0

    Leave a Reply