மளிகை கடைக்கு உரிமம் பெற ரூ.7 ஆயிரம் லஞ்சம்.. அரசு அதிகாரிக்கு ஷாக் தந்த உணவுப் பாதுகாப்புத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 5:49 pm

கோவை வடவள்ளி நவாவூரை சேர்ந்தவர் துரைசாமி, 78. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் லாலிரோட்டில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலக அதிகாரி வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.

கடை லைசன்ஸ் காலவதியாகி இருந்தது. லைசன்ஸ் புதுப்பித்து தர, 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வெங்கடேஷ் கேட்டுள்ளார். பின் பேரம் பேசி, 7 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய, 7 ஆயிரம் ரூபாயை துரைசாமியிடம் கொடுத்து அனுப்பினர். இதனை வெங்கடேஷ் நேரடியாக வாங்காமல் புரோக்கர் பிரதாப் என்பவரை வாங்க சொன்னார்.

அவர் பால் கம்பெனி அருகே வைத்து அந்த பணத்தை வாங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரதாப்பை கைது செய்து, வெங்கடேசையும் கைது செய்தனர். பின் போலீசார் இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

இதில் பிரதாப் வீட்டில் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வெனா, லஞ்சம் வாங்கி கைதான வெங்கடேசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 339

    0

    0