நட்புக்காக… கல்லூரி தோழி விடுத்த அழைப்பு : ஜிகர்தண்டா கடையை திறக்க வந்த மேயர் பிரியா!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 2:12 pm

நட்புக்காக… தோழி விடுத்த அழைப்பு : ஜிகர்தண்டா கடையை திறக்க வந்த மேயர் பிரியா!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நாப்பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய தோழியின் ஜிகர்தண்டா குளிர்பான கடையை திறப்பதற்காக சென்னை மேயர் பிரியா வருகை தந்தார் .

சாந்தினி நாப்பாளையத்தில் வசிக்கும் இவர் சென்னை மேயர் பிரியாவுடன் மூலக்கடையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்ததுள்ளார்.

தோழியின் வேண்டுகோளை ஏற்று மேயர் பிரியா அவரின் கடையை திறப்பதற்காக இன்று நா ப்பாளையம் வந்து கடையை திறந்து வைத்தார்.

பின்புசெய்தியாளர்களிடம் பேசிய மேயர் ப்ரியா இந்த பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர் அதற்கு என்ன தடுப்பு நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்டதற்கு வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக 60% பணிகள் முடிந்துவிட்டதாகவும் மீதமுள்ள 40% பணி கூடிய விரைவில் முடிக்கப்படும் என்றும் அதிகப்படியான மழை வரும் நேரத்தில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது என்றும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற மின் மோட்டார்கள் தங்க வைக்க இடம் உணவு வசதியுடன் கூடிய இடம் ஆகியவை தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!