16வது முறை… செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு : கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2024, 4:29 pm

16வது முறை… செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு : கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்!!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜார்படுத்தபட்டார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11-ம் தேதி தேதி 15-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 29-ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம் அமர்வில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

சமீபத்தில் 3-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை 3-வது முறையாக சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்திலாபாலாஜி மீது குற்றசாட்டு பதிவு இல்லை என்று தெரிவித்துள்ளார். செந்திலாபாலாஜி தரப்பின் புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. புதிய மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றசாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!