தமிழகத்தில் முதன்முறையாக கோவில் கோமாதாவிற்கு வளைகாப்பு : 48 சீர்வரிசையுடன் கிராமத்தினர் அசத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2023, 4:56 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள
மேலப்பட்டு கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை மேல கங்கேசுவரர் 108 சிவசக்தி பிட கோவிலில் தமிழகத்திலேயே முதல் முறையாக கோவிலில் வளர்க்கபட்டு வரும் அம்சவேணி என்ற கோமாதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அக்கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு 24 வகையான வளைகாப்பு உணவுகள் வளையல் தட்டுகள் என 48 சீர்வரிசை தட்டுடன் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
பிறகு கோமாதாவிற்க்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்து ,காலில் சலங்கை கட்டி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் குழந்தைகள் இல்லா தம்பதிகள் கலந்து கொண்டு அம்சவேணி என்ற கோமாதாவிற்கு வளையல் அணிவித்தும் மஞ்சள் பூசியும் அருளாசி பெற்றனர்.
மேலும் மேலப்பட்டு கிராமத்தில் உள்ள அருள் தரும் திரிபுரசுந்தரி அம்மை கோவிலில் கோமாதா எனும் பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி தமிழகத்திலேயே இந்த கோயில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.