இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு… பாஜக போட்ட பிளான் : அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 8:58 pm

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு… பாஜக போட்ட பிளான் : அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தபால் தலையை வெளியிட்டார். இதனை இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றார்.

முதற்கட்டமாக முகாம்களில் தங்கி இருப்பவர்களில், இந்தியாவில் பிறந்தவர்களுக்கு முதற்கட்டமாக குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், இது விரைவில் நடக்கும் என நம்புகிறோம் எனவும் அவர் கூறினார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…