சிறுமிக்கு கட்டாய திருமணம்.. மேஜர் ஆனதும் கணவனுக்கு கல்தா : காவல் நிலையத்தில் இளம்பெண் செய்த காரியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 1:47 pm

பெற்றோரால் கட்டாய திருமணம் செய்த இளம் பெண் கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சை புகுந்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (வயது 18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து(வயது 22) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

18 வயதே ஆன ஜான்சி ராணிக்கு கடந்த ஆண்டு அவரது பெற்றோர் உறவினரான கிளிண்டன் என்பவரை கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சிராணி கடந்த 18ஆம் தேதி இரவு கணவன் வீட்டில் இருந்து சென்று உள்ளார். காதலனை திருமணம் செய்து கொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா விசாரணை செய்தபோது ஜான்சி ராணி தனது காதலுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு உள்ளார். விசாரணை பின் ஞானமுத்துவின் தாயருடன் ஜான்சி ராணியை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி