ஊதியத்தை கொடுக்காமல் டாட்டா காட்டும் FORD : நியாயம் கேட்டு இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2022, 9:51 pm

ஃபோர்டு கம்பெனி ஊழியர்கள் 6வது நாளாக பணியை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து 20 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வரும் பிரபல ஃபோர்டு (FORD) கம்பெனியை வருகிற ஜீன் 20 ஆம்தேதி நிரந்தரமாக மூடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பெனி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டம் துவங்கிய ஆரம்பகால கட்டத்தில் சீனியர், ஜுனியர் (சர்வீஸ்) அடிப்படையில் செட்டில்மென்ட் முறையாக வழங்கப்படும் என கம்பெனி நிர்வாகம் தரப்பில் உத்திரவாதம் அளித்திருந்தனர். ஆனால் இதுநாள் வரையில் எந்தவித செட்டில்மென்டும் அளிக்கப்படவில்லை எனது தொழிலாளர் தரப்பில் கூறப்படுகிறது.

அதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு தொடர்ந்து இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை உள்ளிட்டோர் கம்பெனி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஊழியர்கள் தரப்பில் வைத்த கோரிக்கையின்படி மே மாதம் இறுதிக்குள் ஊழியர்களுக்கான செட்டில்மென்ட் பற்றி இதுவரை எந்தவித உறுதியும் அளிக்கப்படவில்லை.

இதனால் கடந்த திங்கட்கிழமை பணிக்கு வந்த ஊழியர்களிடம் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கையெழுத்து வாங்கிய பிறகே வேலைக்கு உள்ளே செல்ல அனுமதிப்போம் என நிர்வாகம் கெடுபிடி செய்ததால், கடந்த திங்கட்கிழமை அன்று காலை 6மணி முதல் தொடர்ந்து இன்று 6வது நாளாக பணியை புறக்கணித்து ஏராளமான தொழிலாளர்கள் கம்பெனி வாயிலில் அமர்ந்து இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 675

    0

    0