சினிமா பாணியில் கரன்சிகளை கடத்த முயன்ற பயணி… சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்கக்கட்டிகள் ; திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 11:22 am

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பையில் கடத்த முயன்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண்நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆண் பயணி ஒருவரது கைபையை சோதனை மேற்கொண்ட போது அதில் 80,000 அமெரிக்க டாலர் மற்றும் பத்தாயிரம் யூரோ நோட்டுகள் வைத்திருந்த தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தும் முயன்ற பயனியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, மற்றொரு நபர் தனது பையில் கொண்டு வந்த சாக்லேட் பவுடர் டப்பாவில் 211 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் ருபாய் 21,55,038 மதிப்புள்ள 386 கிராம் 3 தங்க செயின்களை மறைத்து கடத்தி வந்தது பறிமுதல் செய்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!