வெளிநாட்டில் வேலை வாய்ப்பு.. நூதன முறையில் ரூ.19.22 லட்சம் மோசடி செய்த ‘பலே’ தம்பதி ; கணவன் கைது.. மனைவி தலைமறைவு

Author: Babu Lakshmanan
19 January 2023, 12:54 pm

கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19.22 லட்சம் மோசடி செய்த புகாரில் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த அருண், மனைவி ஹமலதா ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர். இதை நம்பி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களிடம் ரூ.19.22 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

அவர்களில் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர், தலைமறைவான ஹமலதாவை தேடி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!