‘ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி’… பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர்…!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 7:32 pm

கோவைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அரசு பேருந்தை பிடித்தவாறு ஸ்கேட்டிங்கில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையம் மூலம் வருவது வழக்கம். இப்படி இன்று விமான மூலம் கோவை வந்த சுற்றுலா பயணி ஒருவர் விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலைக்கு வந்துள்ளார். தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் ஸ்கேட்டிங்கில் பயணித்த அவர் திடீரென திருப்பூரில் இருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பின் தொடர்ந்தார்.

இதையடுத்து, அவர் கோவை நகர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் பின்பகுதியை பிடித்தவாறு ஹோப்ஸ் சிக்னல் வரை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் பயணித்துள்ளார். இந்த காட்சியை பேருந்தின் பின் வந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பீளமேடு போலீசார் இந்த காட்சியை வைத்து அவர் யார்..? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார்..? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

https://player.vimeo.com/video/757191458?h=73ca8988f6&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 621

    0

    0