‘மேலே என் ஆபிஸ் ரூம் இருக்கு வா’…பெண்ணிடம் அத்துமீறிய வனத்துறை அலுவலர் : 5 நிமிடத்தில் மாறிய காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 6:23 pm

ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார். இவர் இன்று காலை மது போதையில் அலுவலகத்தில் இருந்து அவ்வழியே துதல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற 40 வயது பெண்ணை மேலே அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

எதற்காக என்று கேட்டபோது பாலியல் வல்லுறவிற்கு வற்புறுத்தி பேசியதாகவும் இதனால் அதிர்ந்து போன அந்த பெண் உடனடியாக வீட்டிற்கு ஓடிச் சென்று தன்னுடைய கணவர் மற்றும் உறவினர்கள் இடத்தில் தகவலை தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் கீழக்கரை வனச்சரக அலுவலகம் முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களோடு வந்ததை அறிந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார் உடனடியாக மேலே அலுவலகத்திற்குள் சென்று கதவை உள்ளாக தாளிட்டுக்கொண்டு இருந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்க காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனச்சரங்க அலுவலர் செந்தில்குமார் இடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 232

    0

    0