எங்க ஏரியா உள்ளே வராத.. சாலையில் இரவு நேரங்களில் ஹாயாக உலா வந்த சிறுத்தை..!
Author: Vignesh19 August 2024, 10:39 am
கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடி வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக, வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை அதிக அளவில் நடமாடி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி பகுதியில் சாலை ஓரத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.