கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 2 கிராம மக்கள் அவதி : புகை மண்டலத்தில் சிக்கிய TOURIST!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும் .தற்போது கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வந்த நிலையில் இன்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் 100 ஏக்கர் பரப்புக்கு மேலாக உள்ள இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
நேற்று துவங்கிய காட்டுத் தீ இன்று மளமளவென பரவி எரிந்து வருகிறது. தொடர்ந்து எரிந்து வரக்கூடிய காட்டுத்தீயின் காரணமாக புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.
மேல்மலை கிராமங்களில் உள்ள வனப் பகுதிகள் மேலும் வனப்பகுதியில் இருக்கக்கூடிய வன விலங்குகளும் இந்தப் பகுதியை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!!
இருந்தாலும் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடிய வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது. மேலும் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கடும் புகை மண்டலத்தால் புகைமண்டலம் சூழ்ந்தவாறு சாலைகளை கடக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.