தர்மபுரி – பென்னாகரம் அருகே வனப்பகுதியில் குடியிருக்கும் மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய வனத்துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருக்கும் பூர்வகுடிகளை வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், சிங்காபுரம், ஒகேனக்கல், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் உள்ளிட்டவர்களை வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஒரு நுங்கினால் ரத்த களரியான குடும்பம்.. மதுபோதையில் கணவன் சதக்… சதக்… ரத்த வெள்ளத்தில் மனைவி மற்றும் மகள்..!!!
அந்த வகையில், இன்று ஒகேனக்கல் அருகே உள்ள, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர்.
கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்கள், வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாக கூறி வனத்துறையினர் அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்து வந்தனர்.
ஏனெனில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக கெடுபுடியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளில் திட்டி, அவர்களின் வீடுகளின் கூறைகளை பிரித்து, பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
வீட்டில் இருந்த பெண்களை வெளியே இழுத்து தள்ளி உள்ளனர். அப்போது இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்கள், திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதால், போக இடம் தெரியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். வனத்துறையினரின் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும், இத்தகைய அராஜக போக்கு முழுக்க முழுக்க கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.