வேகமாக வந்த ரயில்… நொடிப்பொழுதில் மக்னா யானையை காப்பாற்றிய வனத்துறையினர்… வைரலாகும் வீடியோ ; குவியும் பாராட்டு!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 11:04 am

கோவை : கோவையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது, வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த யானை கடந்த ஆறாம் தேதி பிடிக்கப்பட்டு கோவை வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி யானை வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி ஆனைமலை, புரவிபாளையம், கிணத்துக்கடவு, வழியாக மதுக்கரை பகுதியை அடைந்தது.

கடந்த 21-ம் தேதி காலை யானை மதுக்கரை அருகே வாழைத் தோட்டத்தை கடந்து அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் ஏறி நின்றது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் வந்துவிடவே, சாதுரியமாக செயல்பட்ட வனத்துறையினர் நொடிப்பொழுதில் யானையை விரட்டினர். இதில் யானை உடனடியாக தண்டவாளத்தை விட்டு இறங்கியதில் வேகமாக சென்ற ரயில் தண்டவாளத்தில் கடந்து சென்றது.

இந்நிலையில் மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதும், திடீரென ரயில் வந்தபோது சாதுர்யமாக செயல்பட்டு வனத்துறையினர், யானையை விரட்டி அடித்து காப்பாற்றிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 624

    0

    0