‘லைசென்ஸ் இல்லைனா பணம் கொடுத்துதா ஆகணும்’: மில் ஓனரை மிரட்டி லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர்கள்: வெளியான சிசிடிவி காட்சி..!!

Author: Rajesh
2 May 2022, 11:12 pm

கன்னியாகுமரி: களியல் வனச்சரகத்தில் பணிபுரியும் வனவர் மற்றும் வாகன ஓட்டுனர் மர அறுவை ஆலை ஒன்றில் மிரட்டி லஞ்சம் வாங்கியதாய சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் உள்ள வனத்துறை வனச்சரக அலுவலகத்தில் வனவர் ஆக பணிபுரிபவர் காந்திராஜா மற்றும் வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் ராஜேஷ் கண்ணா.

இவர்கள் இருவரும் கொல்லங்கோடு பகுதியை அடுத்த ஊரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் மகேஸ்வரி என்ற மர அறுவை மில்லில் ,உரிய ஆவணங்கள் இன்றி மர அறுவை ஆலை செயல்படுவதாக  மிரட்டி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, மில் உரிமையாளரை மிரட்டி பணம் வாங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோ காட்சிகளை வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 1274

    0

    0