பூண்டி மலை ஏற்றத்துக்கு பணம் வசூலிக்கும் வனத்துறையினர்: அதிர்ச்சியில் பக்தர்கள்…மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

Author: Rajesh
27 February 2022, 4:05 pm

கோவை: சிவராத்திரியை முன்னிட்டு பூண்டி மலை ஏற்றத்துக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறையினர் பணம் வசூலிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு உள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள ஆறாவது மலைகளை கடந்து ஏழாவது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவரே ஆண்டவரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்/

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சித்ரா பவுர்ணமி சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்கள் மகாசிவராத்திரி வருவதால் ஏராளமான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலை ஏற வருகின்றனர். இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்னும் முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும் மலையேறும் பக்தர்களுக்கு அவர்களிடம் வனத்துறையினர் சார்பாக ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு ரசீது கொடுப்பது இல்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெள்ளிகிரிமலை வரும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் பின்பற்றும் முறையே அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலோனோர் சிவபக்தர் என்பதால் அவர்களிடம் பணம் வசூலிப்பது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1418

    0

    0