தேமுதிகவில் புதிய அணி உருவாக்கம்… 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் : பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2024, 7:44 pm

தேமுதிகவில் புதிய அணி உருவாக்கம்… 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் : பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தேமுதிகவில் சமூக வலைதள அணி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூட்யூப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன.

சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் இன்று (10.03.2024) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி 30 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளா

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ