முன்னாள் எம்பி திடீர் மரணம்… சோகத்தில் அதிமுக, திமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2025, 1:51 pm

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பச்சடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பி.ஆர் சுந்தரம்(73), அதிமுகவை சேர்ந்த பி.ஆர் சுந்தரம் 1996 முதல் 2001 வரையும்,2001 முதல் 2006 வரை, இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2014முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பி.ஆர் சுந்தரம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இணைந்த பி.ஆர் சுந்தரம் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கட்சியில் பணியாற்றி வந்தார்.

இதையும் படியுங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி.. சுட்டுப் பிடிக்கப்பட்ட பாம் சரவணன் யார்?

கடந்த சில வருடங்களாகவே பி.ஆர் சுந்தரம் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வீட்டில் இருந்த நிலையில் இன்று காலை அவர் தனது இல்லத்தில் காலமானார்.

அவரது உடல் ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி செலுத்துவதற்காக அவரது உடலானது வருகின்ற சனிக்கிழமை காலை உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Admk Former Mla Dies

மேலும் உயிரிழந்த உடலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

  • Alanganallur Jallikattu highlights அலங்காநல்லூரில் கெத்து காட்டிய சூரியின் காளை…உதயநிதி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க..!
  • Leave a Reply