அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக முன்னாள் அமைச்சர்… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 1:35 pm

அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக முன்னாள் அமைச்சர்… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பள்ளிப்பாளையத்தில் இருந்து நேற்று சென்னை வந்திருந்தார்.

சென்னையில் பல பகுதிகளில் சளி, இருமல், காய்ச்சல் பரவி வரும் நிலையில் தங்கமணிக்கும் காய்ச்சல் பரவிவிட்டது. அத்துடன் சளி இருமலும் காணப்பட்டது.

தங்கமணிக்கு சில மணி நேரத்தில் உடல் சோர்வும் ஏற்பட்டது. உடனே நள்ளிரவு 1 மணியளவில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • veera dheera sooran movie director express his worst feeling on delay release ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..