அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீர் தற்கொலை… திடுக்கிடும் தகவல் : கட்சியினரிடையே பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 7:57 pm

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் அதிமுக சிறப்பான செயல்பட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது.

இதில் புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன். இவர் அதிமுக சார்பில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். முன்னாள் எம்எல்ஏவான இவர் அதிமுக மாநில செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இவர் கடந்த 1991ல் முதன் முதலாக உழவர்கரை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

அதன்பிறகு கடந்த 1996ல் நடந்த தேர்தலிலும் அதே தொகுதியில் களமிறங்கிய நடராஜன் மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் 2வது முறையாக அவர் எம்எல்ஏ ஆனார்.

அதன்பிறகு 2001, 2006 தேர்தலில் உழவர்கரையில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். மேலும் கடந்த 2016 தேர்தலில் மங்களம் தொகுதியில் நடராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் தனது தொழில்களை கவனித்து கொண்டு அதிமுக கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று வில்லியனூரில் உள்ள வீட்டில் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து வில்லியனூர் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

மேலும் அவரது நடராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் குடும்ப பிரச்சனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது நடராஜனுக்கும், அவரது மகனுக்கும் இடையே தொழில் ரீதியாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடராஜன் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இன்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 914

    0

    0