இந்தி மொழி குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரபரப்பு பேச்சு.. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காரசாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2025, 11:31 am

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இதில் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

Ashwin

இதில் பேசிய அஸ்வின், தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா , இந்தி ஓகே வா என கேட்டார். தமிழுக்கு மட்டுமே மாணவ மாணவிகள் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர்.

இதையும் படியுங்க: 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!

இந்திக்கு யாரும் ஆதரவு அளிக்காததால், இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று தெரிவித்தார்.

Ashwin controversy Speech

மேலும் நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்றும், யாராவது என்னை நீ சரிபட்டு வரமாட்ட என்று கூறினால் தான் அதை செய்வேன்.கேப்டன் விஷயத்தில் யாரும் என்னை அப்படி கேட்கவில்லை என்று தெரிவித்தார்.

Ashwin Talk About Hindi Language

இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!