ஒரு காலத்தில் பல கோடி சொத்து…இன்று கையில் இருந்த I PHONE-யை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ..!
Author: Selvan2 January 2025, 4:37 pm
வினோத் காம்பிளியின் பரிதாப நிலை
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும்,இந்திய அணியின் பிரபலமான முன்னாள் கிரிக்கெரட் வீரரான வினோத் காம்பிளி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள்,அதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர்.மேலும் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால் பல வித சிக்கல்களில் சிக்கி வந்தார்.
இந்த சூழலில் இவருடைய பிரம்மாண்ட வீட்டின் கடன் தொகையை செலுத்த முடியாமல் தவித்து வந்த நிலையில் அவருக்கு முன்னாள் வீரர்களான சச்சின்,கபில்தேவ்,அரசியல்வாதிகள் என பலர் உதவி செய்து வந்தனர்.
இதையும் படியுங்க: டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய முக்கிய பவுலர்…பரிதாபத்தில் இந்திய அணி..!
அவருடைய முழு மருத்துவ செலவையும் மருத்துவமனை ஏற்றுக்கொண்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவர் முழுவதும் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.மேலும் மருத்துவர்கள் இனி நீங்கள் மது குடிக்க கூடாது என அறிவுரை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு இவருடைய வீட்டின் பழுதுபார்க்கும் பணி நடைபெற்ற போது 15000 தொகை கொடுக்க முடியாமல் தன்னுடைய I PHONE-யை எடுத்து கொடுத்துள்ளார்.ஒரு காலத்தில் 13 கோடி சொத்துக்கள்,கார் என ஆடம்பர வாழ்க்கையில் இருந்த வினோத் காம்பிளியின் இந்த நிலைமைக்கு அவருடைய தவறான பழக்கவழக்கமே காரணம் என ரசிகர்கள் வேதனையோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அவருக்கு பிசிசிஐ வழங்கி வரும் 30000 ஓய்வூதியம் மட்டுமே அவருடைய வருமானமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .