மக்களுடன் கும்மி அடித்து நடனமாடி பிரச்சாரம் : தூய்மை பணியை செய்து வாக்கு சேகரித்த திமுக முன்னாள் எம்எல்ஏ மனைவி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 11:26 am

கோவை : கோவை மாநகராட்சியின் 52 வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி பொதுமக்களுடன் கும்மி அடித்தும் நடனமாடியும் வாக்கு சேகரித்தார்.

கோவை மாநகராட்சியின் 52 வது வார்டில் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி. முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக்கின் மனைவியான இவர் அதே வார்டில் முன்னாள் கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், தினமும் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கோவை பீளமேடு புதூரில் வாக்கு சேகரிப்பின்போது, பொதுமக்களுடன் இணைந்து கும்மி அடித்தும், நடனம் ஆடியும் நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இது அனைவரையும் கவர்ந்தது.

மேலும், தனது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் அங்குள்ள குப்பைகள் அகற்றும் தூய்மை பணியாளர்களிடம், இந்த வார்டை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அப்பகுதியில் தார் சாலை அமைத்துத் தருவேன் என்றும் உறுதி அளித்தார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…