முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கைது?.. சிபிஐ போட்ட போடு.. கோர்ட்டில் பரபர..!

Author: Vignesh
30 August 2024, 9:29 am

நெல்லை மாவட்டத்தில் இருந்த பழைய சிலைகளை விற்பதற்காக போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது குறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு பொன்மாணிக்கவேல் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை எதிர்த்து, காதர் பாட்ஷா சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வக்கீல் சிபிஐ வக்கீல் வாதம் செய்தனர். இதையடுத்து, நீதிபதி மனுதாரர் மீதான வழக்கு ஜாமீனில் விடுவிக்கக் கூடிய பிரிவுகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதா? என்பது தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கை இன்று ஒத்தி வைத்தனர்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?