முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு ஆதரவாக திரண்ட தொண்டர்கள் : கைதுக்கு எதிர்ப்பு.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 2:10 pm

விழுப்புரம் : அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினிகிளினிக், தாலிக்கு தங்கம், இருசக்கர வாகனம் போன்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சிவி சண்முகம் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம் திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் ஆகிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக ஆட்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளை தடுக்க வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

காலை 8 மணிக்கே தொடங்கிய உண்ணவிரத போராட்டத்தினை நண்பகல் 12 மணிககுள் முடித்து கொள்ள வேண்டுமென காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் வலியுறுத்தினர்.

அப்போது கொடுக்கப்பட்ட நேரமான 5 மணிவரை தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை கைது செய்தனர்.

அப்போது உண்ணாவிரத போராட்டத்திலிருந்த அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சரை கைது செய்ய கூடாது என கோஷங்களை எழுப்பி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கு ஒத்துழைப்பு தாருங்கள் அவர்கள் அவரது கடமையை செய்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் விலக நிற்க அறிவுறுத்தினார். இருப்பினும் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை கைது செய்து பேருந்துவில் ஏற்றிய போது வாகனத்தை வழி மறித்து திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து சிவி சண்முகம் அதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது செய்யப்பட்டதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 1393

    0

    0