துரோகத்தின் மொத்த அடையாளமே ஓபிஎஸ்தான்… அவர் மகன் மட்டும் சும்மா இல்ல… லிஸ்ட் வெளியிடட்டுமா…? அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 2:28 pm

ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவி குறித்து ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் தெரியவரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலை கிளப்பி வரும் நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கும் விதமாக, ஜுலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாய்ஸை செயலிழக்கச் செய்யும் விதமான நடவடிக்கைகளில் இபிஎஸ் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுகவில் உள்ள 75 முக்கிய தலைமை நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- அதிமுகவை ஒருங்கிணைக்க சட்டத்திருத்தம் குறித்தும், கட்சியை வழிநடத்த குழு அமைப்பது குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்பட 5 முக்கிய நிர்வாகிகள் உடல்நிலையை காரணம் காட்டி பங்கேற்கவில்லை. ஆனால், கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கடிதம் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Jayakumar - Updatenews360

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியான நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று வழிநடத்துவதுமாறு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வருகிற 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுவது பற்றியும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற விவகாரங்கள் குறித்து வெளியே சொல்ல முடியாது.

அதிமுகவின் சட்ட விதிகள் குறித்து சிவி சண்முகம் சுமார் 51 நிமிடம் முழுவதுமாக விளக்கம் அளித்துள்ளார். இப்படியிருக்கையில், அண்ணன் ஓபிஎஸ் இந்தக் கூட்டம் செல்லாது என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கட்சியின் விதிகளே அவருக்கு தெரியவில்லை. ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார். துரோகத்தின் முழு அடையாளமாக அவர் இருக்கிறார். அவரது மகன் ரவிந்திரநாத் குமார், தமிழக முதல்வரை சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக கூறியதை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

OPS - Updatenews360

இத்தகைய துரோக செயல்களை செய்த ஓபிஎஸ் அவர்களை நமது அம்மா பத்திரிகையில் எப்படி அவரது பெயரை போட முடியும். ஓபிஎஸ் பொருளாளர் பதவியில் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து அதிமுக பொது குழுவில் முடிவு தெரிய வரும்.

திமுக கட்சி துரோக கட்சி. இலங்கையில் நடைபெற்ற போரில் சுமார் ஒன்றரை கோடி தமிழர்கள் மறைவுக்கு காரணமாக இருந்த கட்சி திமுக. இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நிலையில் சுயநலத்துடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அமைத்து திமுக செயல்பட்டது, எனக் கூறினார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?