மதுரை : மதுரை மாநகராட்சி புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தொற்று நோய்கள் பரவுகிறது.
மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லை, மதுரை மாநகராட்சி வரி வருவாயை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அம்ரூத் குடிநீர் திட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு வராது, மதுரையில் ஒராண்டில் திமுக எந்தவொரு திட்டமும் செய்யவில்லை.
மதுரையில் புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. கலைஞர் நூலகம் தவிர எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக தற்போது திறந்து வைத்து வருகிறார்கள். அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்ற வார்டுகளில் தூய்மை பணிகள் நடைபெறவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்,” என கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.