ஒரு தடவையாவது ஜெயிச்சு இருக்கீங்களா?.. அண்ணாமலையை சல்லி சல்லியாய் நொறுக்கிய செல்லூர் ராஜூ..!

Author: Vignesh
26 August 2024, 12:16 pm

அண்ணாமலை ஒரு தடவையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளாரா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். மதுரை மண்டலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அண்ணா தொழிற்சங்கத்தின் புதிய உறுப்பினர் உரிமை அட்டை வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், நான் அமைச்சராக இருந்துள்ளேன். உலகத்தில் என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக சிறப்பாக நிர்வாகம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் தமிழகத்தில் பெரும் அளவில் பரவி இருந்தாலும் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துள்ளார் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் பேசுகையில், பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது என்று இந்தியாவில் எடுத்துக்காட்டாக கூறினார். ஆர்.பி. உதயகுமார் பல தொழில்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எத்தனையோ புயல்கள் வறட்சிகளை சமாளித்து சிறப்பாக நிர்வாகம் நடத்தப்பட்டது.

இப்போது இருக்கக்கூடிய திமுக ஆட்சியில் இரண்டு புயல்களுக்கு கூட தாங்க முடியவில்லை. மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளேன். அண்ணாமலை ஒரு தடவையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளாரா. எம்ஜிஆரின் நூறு ரூபாய் நாணயத்தின் போது பிரதமர் மோடியை கூப்பிடாததற்கு காரணம். எம்ஜிஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர். மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்.

மதவாத நிகழ்ச்சியாக பேசப்பட்டிருக்கும் அதன் காரணமாக பிரதமர் மோடியை எம்ஜிஆர் இன் 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவில்லை. கலைஞரின் நூறு ரூபாய் நாணயத்தை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறது திமுக அரசு. நடிகர் ரஜினி சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கருணாநிதி பற்றி புகழ்ந்து பேசி வருகிறார். கடவுளை கண்டவர் இல்லை எம்ஜிஆர்-ஐ வென்றவரும் இல்லை என்றும் எப்போதும் ஒரே தலைவர் எம்ஜிஆர்.

மேலும் அமைச்சர் பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கொண்டு வருவதற்கு முழுமையாக காரணம் ஜெயலலிதா. வெளி மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பாஜக ஆளுக மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மதுரையில் வருகிற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒழிக்க மத்திய அரசு மறுக்கிறது என பேசியிருந்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி