விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளிகளின் வீட்டுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு : குடும்பத்தினருக்கு ஆறுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 10:28 pm

மதுரை : விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் நேரு நகர் பகுதியில் நேற்று கழிவுநீர் தொட்டியில் மின் மோட்டாரை பழுது நீக்குவதற்காக பணிக்குச் சென்ற சிவக்குமார், சரவணகுமார், லட்சுமணன் ஆகியோர் விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து அவர்களது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், உரிய இழப்பீடு வழங்காமல் உடலை பெற மாட்டோம் என்று உயிர் நீத்த நபர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் உயிர் நீத்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் முதல் தவணையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மாலை அவருடைய தொகுதியான மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிவகுமார் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவரது மனைவி மகன் மகள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து எலக்ட்ரீசியன் பணிக்காக சென்று விஷவாயு தாக்கி உயிர் நீத்த சரவணகுமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 1142

    0

    0