மதுரை : தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் என்றும், தற்போது ஸ்டாலின் பிரதமர் மேடையில் கேட்பது மிகப் பெரிய ஸ்டண்ட் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை – தேனி பயணிகள் ரயில் சேவையை பாரத பிரதமர் சென்னை நேரு உள் அரங்கிலிருந்து காணொலி காட்சி மூலம் துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;- தமிழ்நாட்டுக்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை இன்றைக்கு கொடுத்திருக்கிறார். இவைகள் அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சிப் பணிகளை கொண்டு வருகின்ற வகையில் 31 ஆயிரத்து 550 கோடி ரூபாய் பெருமான திட்டங்களை அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்திருக்கிறார்.
மதுரை – தேனி மக்களின் கனவு திட்டமான அகல ரயில் பாதையை தொடங்கி வைத்திருக்கிறார். அதற்காக மதுரை தென் மாவட்ட மக்களின் சார்பாக 506 கோடி ரூபாய் பெருமான திட்டமான மதுரை தேனி அகல ரயில் பாதை உருவாக்க காரணமாக இருந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு இந்த நேரத்தில் மக்களின் சார்பாக நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று கச்சத்தீவை விற்றது கருணாநிதி ஆட்சி காலத்தில் தான். தற்போது ஸ்டாலின் பிரதமர் மேடையில் கேட்பது மிகப் பெரிய ஸ்டண்ட் என்பது தெரியவருகிறது. அதேபோன்று நீட் தேர்வையும் கேட்கிறார். நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்போது திமுகவின் இணை அமைச்சராக இருந்தவர் தான்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, அனைத்து மாநிலங்களிலும் இயற்றப்பட்டுள்ளன இருந்தபோதிலும், தமிழ்நாட்டிற்கு மட்டும் விதிவிலக்கு கேட்கிறோம் என்பது அரசியலுக்காக முதலமைச்சர் விளம்பரம் தேடுவதற்காக, இது குறித்து மேடையில் பேசியுள்ளார் என்பதாக கருதுகிறேன்.
நிதி பங்கீடு பல மாநிலங்களுக்கு தற்போது மட்டும் குறைத்து கொடுப்பதில்லை. கட்டமைப்பு குறைவாக இருக்கும் பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் வரி வருவாய் இல்லாமல் கூட இருந்தாலும், இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு, அந்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாக மத்திய அரசு செய்து வருகிறது. அதனை ஜெயலலிதாவும் எதிர்த்து இருக்கிறார்.
நீட் விலக்கை பேசிய முதல்வர் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. தொடர்ந்து தென் மாவட்ட மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடிய போது, நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் இருந்தது, அவர் அலுவலகத்தில் இருந்ததால் அவரது ஒலிவாங்கி செயல்படாமல் இருந்திருக்கலாம். எனவே அவர் எழுந்து நிற்காமல் இருந்திருக்கலாம். மற்ற மத்திய அமைச்சரான ரயில்வே துறை அமைச்சர் எழுந்து நின்றுள்ளார். எனவே இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது, என்று பேசினார்.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.